Programming language ல் உள்ள கமாண்டுகளை தெரிந்து கொண்டு கொடுக்கப்பட்ட பிரச்சனைகளை - கேள்விகளை உள்வாங்கி அதற்கு எப்படி தீர்வு காணவேண்டும் என்ற லாஜிக் உங்களுக்கு இருந்தால் நீங்கள் ஒரு புரோகிராமர் ஆகிவிடலாம் என்பதை முந்தைய பாகத்தில் பார்த்தோம்.
அதாவது கமாண்டுகள் என்னென்ன என்பது தெரிந்திருந்து நமது தேவைக்கு தகுந்தவாறு நாம் எதிர்பார்க்கும் ரிசல்ட் கிடைக்க எந்த வரிசையில் அவற்றை எழுதவேண்டும் என்கிற லாஜிக் இருந்தால் நம்மால் புரோகிராமர் ஆகிவிட முடியும்.
Command டுகளை நாம் மனனம் செய்து கொள்வது சுலபம், ஏனென்றால் அவை மாறாது, எண்ணிக்கையிலும் குறைவு. ஆனால் Logic ஐ மனப்பாடம் செய்யவே கூடாது, ஏனென்றால் logic நமது தேவைக்கு தகுந்தவாறு நேரத்திற்கு தகுந்தவாறு மாறிக்கொண்டே இருக்கும். அது சிந்திப்பதனால் நமக்கு கிடைப்பது. சிந்திக்கும் திறன் இறைவன் மனிதனுக்கு வழங்கிய அருட்கொடைகளில் ஒன்று.